“சல்லியர்கள்” பட சிறப்பு விழா! பிரபலங்கள் பங்கேற்பு (VIDEO)

"சல்லியர்கள்" பட சிறப்பு விழா! பிரபலங்கள் பங்கேற்பு (VIDEO)

CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

WhatsApp Image 2023 12 24 at 11.07.48 9a0162ca

இந்தப்படத்தின் சிறப்பு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்க்ள் மற்று இத்திரைப்பட நடிகர்கள் உட்பட அனைத்து கலைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சிறப்பு விருந்தினராக நாம்தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; சேது கருணாஸ் & கரிகாலன்

இணை தயாரிப்பு ; நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார்

இயக்கம் ; கிட்டு

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

இசை , பிரவீண் குமார்

படத்தொகுப்பு ; சி,எம் இளங்கோவன்

கலை இயக்குனர் ; முஜிபூர் ரஹ்மான்

ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்

விஎப்எக்ஸ் ; சதீஷ் சேகர்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button