சனியால் ராஜ வாழ்க்கை: இவங்க வாழ்க்கையில் கஷ்டமே வராதாம்…

சனியால் ராஜ வாழ்க்கை: இவங்க வாழ்க்கையில் கஷ்டமே வராதாம்...

சனியால் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுவதுண்டு.

அத்தோடு எண்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரது எதிர்காலம், குணாதிசயங்கள் போன்றவை குறித்து கணித்து கூறப்படும் ஒரு வகையான ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியானது அந்நபரின் வாழ்க்கை மற்றும் குணாதிசயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அப்படி எண் கணிதத்தில் மொத்தம் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த 9 எண்களுக்கும் ஒவ்வொரு அதிபதிகள் உள்ளன. இந்த 9 எண்களும் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும். இதில் எண் 8-க்குரிய அதிபதி சனி பகவான். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8.

சனி பகவான், ராஜ வாழ்க்கை, numerology, சனியால் இந்த 8-க்கு உரியவர்கள் அதிர்ஷ்டத்தை விட கர்மாவை நம்புவார்கள். அதாவது, ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன் தான் கிடைக்கும் என்பதை நம்புவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் பரிபூர்ண அருள் இருக்கும். இப்போது சனி பகவானுக்கு பிடித்த மற்றும் விதி எண் 8-க்கு உரியவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.

ராஜ வாழ்க்கை வாழ்வர்

எண் கணிதத்தின் படி, விதி எண் 8-க்கு உரியவர்களுக்கு சனி பகவானின் சிறப்பான அருள் உண்டு. இந்த எண்ணிற்கு உரியவர்கள் வாழ்வில் பணக்காரர்களாகவும், ஏராளமான சொத்துக்களைக் கொண்டவர்களாகவும் இருப்பர். மேலும் இவர்களின் அதிர்ஷ்டமானது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரகாசிக்கும்.

அதாவது, இவர்கள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஏனெனில் சனி பகவான் எப்போதும் ஒருவரது கடின உழைப்புக்கான பலனைத் தாமதமாகத் தான் தருவார். மேலும் பொருள் இன்பங்களை அரிதாகவே அனுபவிப்பார்.

இந்த எண்ணிற்கு உரியவர்கள் எப்போதும் எளிமையான வாழ்க்கையை வாழ்வார்கள் மற்றும் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு ஆழமாக யோசித்த பின்னரே எடுப்பார்கள். மேலும் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும், அதை யாரிடமும் சொல்லாமல் அமைதியாக செய்து முடிப்பார்கள்.

சனி பகவான், ராஜ வாழ்க்கை, numerology, சனியால் கர்மாவை நம்புவார்கள்

விதி எண் 8-க்கு உரியவர்கள் அதிர்ஷ்டத்தை விட செயல்களுக்கு ஏற்ப பலன்களே கிடைக்கும் என்று நம்புவார்கள். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும், அதை அலப்பறை செய்து செய்யாமல், அமைதியாக செய்து முடிப்பார்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் விடாமுயற்சி கொண்டவர்கள். மற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளமாட்டார்கள். மேலும் தங்கள் அதிகாரங்களை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள்.

இவர்களுக்கான சிறந்த துறைகள்

விதி எண் 8-க்கு உரியவர்களுக்கான சிறந்த வேலை என்றால் அது பெட்ரோல், இரும்பு, எண்ணெய் தொடர்பான வியாபாரம் தான். இந்த துறைகளில் வேலை செய்தால், நல்ல வெற்றியையும், நிறைய பணத்தையும் சம்பாதிப்பார்கள். இது தவிர, இவர்கள் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் தொடர்பான தொழில்களில் இருந்தால், நல்ல வெற்றியைக் காண்பார்கள்.

சனி பகவான், ராஜ வாழ்க்கை, numerology, சனியால்

 

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button