வகுப்பறைகளில் பயன்படும் சாக்பீஸ்கள் உருவான கதை தெரியுமா..?

சாக்பீஸ்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. காரணம், அனைத்து வகுப்புகளும் புரஜெக்டர்கள் மூலம் நடக்கத் தொடங்கிவிட்டன. சாக்பீஸ்களின் காலம் வேறுமாதிரியானது.

போர்டை கறுப்பாக்க இலைகளை பறித்து வந்து கரும்பலகைகளில் பூச மாணவர்களுக்கு இடையே கடும் போட்டி நடக்கும். சாக்பீஸ் காரம் மூக்கில் நுழைய அதனை தூய்மைப்படுத்தியதை இனி பலரும் இனிய நினைவாக மனதில் வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

Do you know the story of the origin of sockpeas

சாக்பீஸ் பெட்டிகளை தலைமையாசிரியரின் அறையிலிருந்து எடுத்து வரும் அதிகாரம், ஆசிரியர்களுக்கு நெருக்கமான மாணவர்களுக்கு மட்டுமே உண்டு. அதை எடுத்துவருவதும், பாதுகாப்பதுமான பணிகளை லீடர்கள் செய்து வந்தனர். மினி சர்வாதிகாரியாக உணர வைத்த பெருமைக்கு சாக்பீஸூம் முக்கியக் காரணம்.

புகழ்பெற்ற சாக்பீஸ்களைத் தயாரிக்கும் ஜப்பான் நிறுவனமான ஹோக்கோரோமோ புல்டச் சாக், தன் தயாரிப்புகளை நிறுத்திவிட்டது. இந்த நிறுவனத்தை கொரிய நிறுவனம் கையகப்படுத்திவிட்டது.

சாக்பீஸ் கால்சியம் கார்பனேட்டில் உருவாக்கப்படுகிறது. கடலில் கிடைக்கும் கோகோலிதோபோர்ஸ் எனும் பாசியைப் பயன்படுத்தி சாக்பீஸ்கள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் வணிகரீதியில் பயன்படுத்தும்போது, கால்சியம் சல்ஃபேட், ஜிப்சம் ஆகியவை உள்ளே நுழைந்துவிட்டன.

story of the origin of chalk

மூன்றுவகை சாக்பீஸ்கள் உண்டு. வெள்ளை, சிவப்பு, கருப்பு.

தொண்ணூறுகளில் ஹோகோரோமோ நிறுவனத்தில் ஆண்டுக்கு 90 மில்லியன் சாக்பீஸ் துண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டபோது, ஆண்டுக்கு 45 மில்லியன் அளவுக்கு சாக்பீஸ்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

சாக்பீஸ்களின் பூர்வீகம் வரலாற்று காலத்துக்கு முந்தையது. மனிதன் காடுகளில் வேட்டையாடி திரிந்த போது மனதில் தோன்றியதை பாறைகளில் எழுதுவதற்காக முதன் முதலாக சாக்பீஸை பயன்படுத்த தொடங்கினான். இது தான் பிற்காலத்தில் கரும்பலகையில் வெள்ளை நிற சாக்பீஸாக எழுதுவதற்கான உந்துதலை அளித்திருக்க வேண்டும்.

[penci_related_posts dis_pview=”yes” dis_pdate=”yes” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கரும்பலகையில் வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் சாக்பீஸ்கள் 10 மிமீ தடிமனும், 80 மிமீ நீளமும் கொண்டவையாக இருகக்கும். ஜிப்சம், கால்சியம் சல்பேட், கால்சியம் கார்பனேட் போன்றவற்றால் சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் இயற்கையாக கிடைத்த சுண்ணாம்பு கட்டிகளை சாக்பீஸ்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

history of chalk

பின்னர் எழுதுவதற்கு வசதியாக கையடக்க சாக்பீஸ்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இன்றைக்கு கரும்பலகைகள் காலவதியாகி சிந்தெட்டிக் போர்டூகள், புரஜெக்டர் ஸ்கிரீன்கள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. சிந்தெட்டிக் போர்டுகளில் ஸ்கெட்ச் பேனா, மார்க்கர் போன்றவற்றால் எழுதுகின்றனர்.

வெள்ளை நிற போர்டுகளில் மார்க்கர் பென் கொண்டு எழுதும் முறையை ஜெர்ரி வூல்ப் என்பவர் கண்டு பிடித்தார். இன்றைக்கு நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் போர்டுகள் பாயின்டர்கள் என்று காலம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் 90 களுக்கு முந்தைய கிட்ஸ்களுக்கு சாக்பீஸ் என்ற காலம் ஒரு பொற்காலமாக இன்னும் மனதில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button