இந்தா வச்சுக்கோ..! அள்ளிக்கொடுத்த அமெரிக்கா …
இந்தா வச்சுக்கோ..! அள்ளிக்கொடுத்த அமெரிக்கா ...
“இந்தா வச்சுக்கோ” என்ற திரைப்பட பாணியைப்போல அமெரிக்காவின் செயற்பாடு அமைந்துள்ளது.
புதிய ராணுவ உதவித் தொகுப்பின் ஒருபகுதியாக சக்திவாய்ந்த Patriot ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
குடிமக்களை காப்பாற்ற திட்டம்
சக்திவாய்ந்த Patriot ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிப்பதனூடாக, அந்த நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 பில்லியன் டொலர் ராணுவ உதவியை பயன்படுத்திக்கொள்ளவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
குறித்த தகவலை பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதனிடையே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், அதிகரிக்கும் ரஷ்யாவின் அச்சுறுத்தலில் இருந்து குடிமக்களை காப்பாற்றும் பொருட்டு Patriot ஏவுகணை மிக அவசரமாகத் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், புதனன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் கையொப்பமிடப்பட்ட 60 பில்லியன் டொலர் உதவித் தொகுப்பின் ஒரு பகுதி இந்த 6 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
ஐரோப்பிய கூட்டாளிகளுடன்
இதுவரை அளிக்கப்பட்ட ராணுவ உதவியைவிட மிக அதிகமாக உக்ரைனுக்கு அளிப்பதில் மிக விரைவில் அமெரிக்கா முடிவெடுக்கும் என்றார் பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin.
அதுமட்டுமின்றி, மிக விரைவில் அதிக ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிக்க அமெரிக்கா தயாராகி வருவதாகவும், அத்துடன் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு Patriot ஏவுகணையும் தயாரிக்க ஆகும் செலவு 4 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. ஆனால் Patriot ஏவுகணைக்கான பெட்டரி செலவுகள் சுமார் 1 பில்லியன் டொலர் என்றே தெரிவிக்கின்றனர்.