பயணிகளின் கவனத்திற்கு..! வழிப்பறிக்கு பெயர்போன நாடு,எது தெரியுமா?
பயணிகளின் கவனத்திற்கு..! வழிப்பறிக்கு பெயர்போன நாடு,எது தெரியுமா?
பயணிகளின் கவனத்தை ஈர்த்து சுற்றுலாத்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகள் பல இருக்கின்றன.
அதையும் தாண்டி வழிப்பறி சம்பவங்களுக்கு ஐரோப்பாவின் தலைநகரமாக இந்த நாடு அமைந்துள்ளது என புதிய பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
விருப்பமான நாடுகளில் ஒன்று
பிரித்தானியர்கள் உட்பட பல நாட்டவர்களின் விருப்பமான நாடுகளில் ஒன்று இத்தாலி. தற்போது ஐரோப்பாவின் வழிப்பறி தலைநகரமாக இந்த நாடு மாறியுள்ளது.
கூட்டமாக மக்கள் காணப்படும் பொது போக்குவரத்து மையங்கள், மக்கள் அதிகமாக திரளும் பகுதிகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தெருக்களில் சர்வசாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இத்தாலி
சுற்றுலா பயணிகள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை பதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
worst country in europe for pickpockets
- Italy
- France
- Spain
- Germany
- Netherlands
- Portugal
- Turkey
- Greece
- Poland
- Ireland
வழிப்பறி சம்பவங்களுக்கு மிக மோசமான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இத்தாலியும் இரண்டாமிடத்தில் பிரான்சும் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஸ்பெயின், அடுத்து ஜேர்மனி, நெதர்லாந்து என முதல் ஐந்து இடங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகள் அமைந்துள்ளன.