ஆப்பு வைக்கும் சனி பகவான்..! சிக்கப்போகும் 3 ராசியினர் யார்?

ஆப்பு வைக்கும் சனி பகவான்..! சிக்கப்போகும் 3 ராசியினர் யார்?

ஆப்பு என்றால் வச்சு செய்யணும். அதை சரியாக செய்வதற்கு சனி பகவானை தாண்டி எவராலும் முடியாது.

நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களை அளிக்கும் நீதிமான் தான் சனி பகவான். கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். இவர் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாவார்.

சனி பகவான் ஒருவரது செயல்களால் மகிழ்ச்சி அடைந்தால், அவரை செல்வந்தராக்குவார். அதுவே கோபமடைந்தால், அவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்க, பல சோதனைகளை அளிப்பார்.

தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிப்பார். ஆனால் அதற்கு முன் வருகிற ஜூன் 29 ஆம் திகதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

ஆப்பு, vakri, retrograde, aquariusஇப்படி வக்ர நிலையில் நவம்பர் 15 ஆம் திகதி வரை இருப்பார். சனி பகவான் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். உங்களின் பல ஆசைகளை நிறைவேறாமல் ஏமாற்றமடையக்கூடும். இதனால் விரக்தியடையலாம். ஜூன் முதல் அடுத்த 5 மாதத்தில் பணம் தொடர்பான எந்த ஒரு வேலையையும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடலாம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் எந்த ஒரு முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். முக்கியமாக மந்தமாகவும், சோம்பேறியாகவும் இருப்பீர்கள். காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்களும் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பரிகாரம்: சனி வக்ரமாவதால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் கொண்டு தீபமிட்டு வழிபட்டு வாருங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தாலும் எவ்வித பாராட்டும் கிடைக்காது.

உங்கள் இலக்கை அடைய முடியாமல் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சிலருக்கு பதவி உயர்வு பாதிக்கப்படலாம். வியாபாரிகள் இலாபத்தைப் பெற முடியாது. குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முடிந்தவரை வாயை அடக்கி அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இப்படி இருந்தாலே பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்: சனி வக்ரமாவதால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கவும், சனி பகவானின் ஆசியைப் பெறவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு நிற ஆடைகளை அணிந்து சனி பகவானை தவறாமல் வழிபடுங்கள்.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்காது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருங்கள். இல்லாவிட்டால் அதுவே உங்கள் பிரச்சனைகளை அதிகரித்துவிடும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த பலனை அல்லது வெற்றியைப் பெற முடியாது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். வருமானமும் சிறப்பாக இருக்காது. இதனால் சற்று பண பிரச்சனைகளை சந்திக்கலாம். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்: சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் எள் விளக்கு போட்டு, சனி பகவானை வழிபட்டு வாருங்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button