புற்றுநோயை உண்டாக்கும் சில இந்திய மசாலாக்கள்..! திடுக்கிடும் ரிப்போர்ட்…
புற்றுநோயை உண்டாக்கும் சில இந்திய மசாலாக்கள்..! திடுக்கிடும் ரிப்போர்ட்...
புற்றுநோயை உடலில் ஏற்படுத்தக்கூடிய சில இந்திய மசாலாக்கள் தொடர்பில் அண்மையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
உலகில் உணவுகளானது ஒரு நாடுகளில் இருந்து மற்றொரு நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து பல உணவுப் பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.
அப்படி ஒரு நாட்டிற்கு மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் அந்நாட்டில் விற்கப்படுவதற்கு முன், அந்த உணவுப் பொருட்களின் தரத்தை இந்நாட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்வர்.
இந்நிலையில் ஐரோப்பாவிற்கு இந்தியாவில் இருந்து ஒருசில உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போது ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் 527 உணவுப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
முக்கியமாக இந்த உணவுப் பொருட்களானது இந்தியாவில் மிகவும் பிரபலமான MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றினுடையது. இந்த உணவு பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எத்திலீன் ஆக்ஸைடு என்ற கெமிக்கல் இருப்பது ஆய்வின் போது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த தயாரிப்புகளானது ஹாங்காங், சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக ஐரோப்பாவில் எத்திலீன் ஆக்ஸைடு உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அப்படி இந்த கெமிக்கல் இருக்கும் உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டால், அவை விற்க தடைசெய்யப்பட்டும் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் 527 உணவுப் பொருட்களில் கெமிக்கல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 525 உணவுப் பொருட்கள் மற்றும் 2 தீவனப் பொருட்கள். இவற்றில் 332 உணவுப் பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்றும், மீதமுள்ளவை பிற நாடுகளைச் சேர்ந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.