பணியிடத்தில் லவ் ப்ரோபோசல்..! இடைநீக்கம் செய்யப்பட்டார்களா?

பணியிடத்தில் லவ் ப்ரோபோசல்..! இடைநீக்கம் செய்யப்பட்டார்களா?

பணியிடத்தில் காதல் மலர்வதும் பனிமூட்டத்தில் காதல் துளிர்விடுவதும் இயல்பானதே..!

அப்படி ஒரு விமானத்தில் பணிபுரியும் விமானிக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் இடையிலான Love Proposal  இணையத்தில் வைரலாகிவருகிறது.

விமானம் Take-Off ஆவதற்கு முன் பயணிகளுக்கு அறிவிப்பை மேற்கொண்ட பைலட், அதே விமானத்தின் பணிப்பெண்ணிடம் ஒரு அறிவிப்பைப் போலவே தனது காதலை முன்மொழிந்தார்.

பயணிகளுக்கு சேவை செய்வதில் மும்முரமாக இருந்த அந்த விமான பணிப்பெண், விமானியின் வார்த்தைகளை கேட்டு விரைந்து வந்து திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

போலந்தின் வார்சாவில் இருந்து காரகோவ் செல்லும் விமானத்தில் இந்த காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது.

பணியிடத்தில், pilot, propose, attendant

பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்தனர். இங்கு விமான பணிப்பெண்கள் பயணிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். மற்றொரு விமானம் ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, ​​காக்பிட் கேபினில் இருந்து பயணிகள் முன் வந்த கேப்டன் கோனார்ட் ஹாங்க் (Captain Konrad Hanc) ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

ஹாங்க் அனைத்து பயணிகளையும் வரவேற்று, இந்த விமானத்தில் ஒரு சிறப்பு நபர் இருப்பதாக கூறினார்.

“இந்த சிறப்பான மற்றும் அழகான நபரை நான் சந்தித்த பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது. காரகோவ் செல்லும் விமானத்தில் அந்த சிறப்பு வாய்ந்த ஒருவரை நான் சந்தித்தேன். அந்த நபரின் பெயர் Paula.

ஹே Paula, நீ தான் என வாழ்க்கைக்கு கிடைத்த அர்த்தம். என் கனவுகள் அனைத்தின் சக்தியும் நீயே” என்று கூறியபடி முட்டிபோட்ட கேப்டன் திருமண முன்மொழிவை செய்தார்.

அதே சமயம் ஒரு கையில் பூங்கொத்து, மறு கையில் மோதிரம் என இந்த காதல் அறிவிப்பை வெளியிட்ட கேப்டனுக்கு பவுலாவிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தது.

விமானத்தின் மறுமுனையில் இருந்த பவுலா, கேப்டன் முன்மொழிந்தபடி ஓடி வந்தார். கேப்டன் அவளை இறுக்கமாக முத்தமிட்டார்.

அதே விமானத்தின் பயணிகளும் மற்ற பணியாளர்களும் கேப்டன் கோனார்ட் மற்றும் Stewardess Paula ஜோடியை கைதட்டி வாழ்த்தினர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button