சூப்பர்மேனாக மாறும் சுக்கிரன்..! அதிஷ்டத்தை அள்ளும் சூப்பர் ராசியினர்…

சூப்பர்மேனாக மாறும் சுக்கிரன்..! அதிஷ்டத்தை அள்ளும் சூப்பர் ராசியினர்...

சூப்பர்மேனாக திகழ்வதென்பது சாதாரண மனிதர்களான நமக்கு எட்டா கனிதான்.

நவகிரகங்களில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், அந்நபர் மிகவும் அழகாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சுக்கிரன் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, காதல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இப்படிப்பட்ட சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் சுக்கிரன் ஏப்ரல் 24 ஆம் திகதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த மேஷ ராசியில் மே 19 ஆம் திகதி வரை இருந்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைவார்.

சூப்பர்மேனாக, venus, transit, effectsஇப்படி சுக்கிரன் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது மேஷம் செல்லும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல வகையில் அற்புதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அதற்கான வாய்ப்புக்கள் அமையும். அரசு வேலைக்கு முயற்சித்து வந்தால், இக்காலத்தில் வேலை கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாமியார் மாமனார் தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். அவசரப்பட்டால் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவுகளை செய்ய நேரிடும். வீடு அல்லது வாகனத்தை விற்க விரும்பினால், இக்காலம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவை மோசமடைய விடாதீர்கள். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் மட்டுமின்றி பதவி உயர்வும், பணியிடத்தில் மரியாதையையும் பெறுவார்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். துணிச்சல் அதிகரிப்பது மட்டுமின்றி, எடுக்கும் முடிவுகள் நல்ல பாராட்டைப் பெறும். தொண்டுகள் மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும்.

கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையாக இருக்கும். நம்பகமானர் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். நீதிமன்றம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இக்காலத்தில் பரம்பரை சொத்துக்களை விற்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பு ஏற்படக்கூடும். யாருக்கும் கடனாக பணம் கொடுக்க வேண்டாம். இருப்பினும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய சவால்களை சந்தித்தாலும், அனைத்து வகையிலும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் வெற்றி பெறும். நிலுவையில் உள்ள அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல ஏற்ற தாழ்வுகளை சந்திப்பார்கள். வாகனம் அல்லது வீட்டிற்கு பெரிய கடன் வாங்க விரும்பினால், அது நன்மை பயக்கும். ரகசிய எதிரிகள் அதிகரிப்பதோடு, உங்களை வீழ்த்தும் ஒரு வாய்ப்பையும் விடமாட்டார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மாணவர்கள் சாதனைகளைப் புரிவார்கள். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் தொடங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் இனிமையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நிலம், வீடு, சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் இயல்பில் மென்மை காணப்படுவதோடு, தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். தொண்டு மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண பேச்சுகள் வெற்றி பெறும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நிலம், சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சதிக்கு ஆளாகாமல் இருக்க, வேலை முடிந்ததும் வீட்டிற்கு வருவது நல்லது.

சூப்பர்மேனாக, venus, transit, effects

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button