இளவரசிக்கு கிடைத்ததா புதிய பதவி? யாருக்கு ராஜ கௌரவம்..!
இளவரசிக்கு கிடைத்ததா புதிய பதவி? யாருக்கு ராஜ கௌரவம்..!
பிரித்தானிய ராணி, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோருக்கு புதிய பதவியை மன்னர் சார்லஸ் வழங்கி கௌரவித்துள்ளார்.
புதிய பதவிகளை அறிவித்த மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ் III வெளியிட்ட சமீபத்திய கௌரவங்கள் பட்டியலில் தனது குடும்பத்தினரின் சேவையை அங்கீகரித்துள்ளார்.
ஆண்டுக்கு இரண்டு முறை வெளியாகும் இந்த அறிவிப்பில், ராணி மற்றும் இளைய தலைமுறை அரச குடும்பத்தினர் என இருவருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ராணி கமீலாவுக்கு புதிய பட்டம்
ராணி கமீலா அவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க “கிராண்ட் மாஸ்டர் மற்றும் பிரின்சிபல் ஃபர்ஸ்ட் லேடி ஆஃப் தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி மோஸ்ட் எக்ஸலன்ட் ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்”(Grand Master and First or Principal Dame Grand Cross of the Most Excellent Order of the British Empire. ) என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இது பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான அவரது நீண்ட கால அரச சேவையை அங்கீகரிக்கிறது.
இளவரசர் வில்லியமின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது, ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட கௌரவம் குறித்த தகவல் தெரியவில்லை.
இளவரசி கேட் மிடில்டனுக்கும் புதிய பட்டம்
மன்னரின் இந்த அறிவிப்பில் மிகவும் கவர்ச்சிக்கரமான பதவியாக வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு வழங்கப்பட்ட பதவி அனைவரையும் ஈர்த்துள்ளது.
இளவரசி கேட் மிடில்டனுக்கு, மதிப்புமிக்க “ஆர்டர் ஆஃப் தி கம்பேனியன்ஸ் ஆஃப் ஹானர்”(Order of the Companions of Honour) அமைப்பில் அவருக்காக ஒரு புதிய பதவியை மன்னர் சார்லஸ் உருவாக்கினார்.
கேட் இப்போது “ராயல் கம்பேனியன்”(Royal Companion), இந்த சிறப்பைப் பெறும் முதல் அரச குடும்ப உறுப்பினர் ஆவார்.