ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்..! எரிபொருட்களின் விலையில் பாரிய தாக்கமா?

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்..! எரிபொருட்களின் விலையில் பாரிய தாக்கமா?

ஹார்முஸ் ஜலசந்தியானது ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் முற்றுகை இடப்படும் அபாயம் உள்ளதென சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தடுத்து நிறுத்தினால், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை உயரக்கூடும் என்று சந்தை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இது நடந்தால், இந்தியாவுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 90 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

ஹார்முஸ், war, oil, prices, strait

இந்த நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முற்றுகையிட்டால், எண்ணெய் மற்றும் எல்என்ஜி (Oil and LNG) விலையில் ஏற்றம் காணப்படும் என்று மோதிலால் ஓஷ்வால் பைனான்சியல் சர்வீசஸ் (Motilal Oswal Financial Services) நிறுவனம் எச்சரிக்கிறது.

இதனிடையே, எண்ணெய் விநியோக நெருக்கடி மோசமடைந்தால், ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதியை இந்தியா அதிகரிக்கக்கூடும் என்று CareEdge மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button