குங்குமம் தவறினால் குடும்பச்சிக்கலா? ஜோதிடர்களின் வாக்கு..!
குங்குமம் தவறினால் குடும்பச்சிக்கலா? ஜோதிடர்களின் வாக்கு..!
குங்குமம் தவறினால் குலம் அழியும் அளவுக்கு பாரிய சிக்கலாக அதனை எல்லோரும் எடுத்துக்கொள்வதுண்டு.
நம் வீடுகளில் சில முக்கியமான விஷயமாக குங்குமம், கண்ணாடி மற்றும் பூஜை பொருட்களை பாதுபாப்போம்.அப்படியாக எதோ ஒரு நாள் குங்குமம் கை தவறி கொட்டி விட்டால் பதட்டம் ஏற்படும்.
பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபம் தானாக அணைந்தாலும் அந்த பதற்றம் வரும். இது ஒன்றும் அபசகுணம் அல்ல என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்
.
மாங்கல்யம் கழண்று விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் .இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும்.
வீட்டில் பூஜை அறையில் காமாட்சி விளக்கு தவறுதல், குங்குமம், விபூதி தவறுதல், பெரிய விபத்தில் இருந்து சிறு காயத்துடன் தப்பி பிழைத்தல் போன்றவைகளால் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.
நம்முடைய வாழ்வில் நாம் புனிதமாக கருதும் விஷயங்கள் சில சமயம் தவறும்போது அதை அபசகுணமாக நினைக்க வேண்டியதில்லை. மாறாக, அவற்றை யோகமாகவும் பரிகாரமாகவும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதனால் யதார்த்தமாக நிகழும் விஷயங்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை நினைத்து மனதை குழப்பி கொள்ளாமல் நல்ல மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.
அப்படி மன குழப்பம் ஏற்படும் பொழுது பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பை தருமென்பது ஜோதிடர்களின் வாக்காகும்.