சீனாவுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா..! பாகிஸ்தானின் இரகசிய திட்டம்.
சீனாவுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா..! பாகிஸ்தானின் இரகசிய திட்டம்.
சீனாவுக்கு மேலும் மேலும் தலையிடியை கொடுப்பது அமெரிக்காவின் வழக்கமாகிவிட்ட்து.
பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை ரகசியமாக வழங்கிய 3 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா முக்கியமாக ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வழங்கி வருகிறது.
இதனிடையே, சீன நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தையும் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை இரகசியமாக வழங்கிய சீனாவைச் சேர்ந்த Xi’an Longde Technology Development, Tianjin Creative Source International Trade மற்றும் Granpect Co. Ltd ஆகிய 3 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.
மேலும், பெலாரஸை (Belarus) தளமாகக் கொண்ட Minsk Wheel Tractor Plant நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிறுவனங்கள் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் அந்த ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டால், சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்க பாதுகாப்புத் துறை பிரதிநிதி மத்யூ மில்லர் கூறினார்.
ஆயுதங்கள் வாங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும், ஆயுத விநியோகத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மில்லர் மிரட்டியுள்ளார்.