பிரித்தானிய பிரதமரின் சபதம்… ஈரான் தகர்த்தப்படுமென எச்சரிக்கை!
பிரித்தானிய பிரதமரின் சபதம்... ஈரான் தகர்த்தப்படுமென எச்சரிக்கை!
பிரித்தானிய மற்றும் அமெரிக்க இலக்கானது தற்போது ஈரானிய தளபதிமீது வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு இஸ்ரேல் மீதான ஈரானின் தொடர் தாக்குதலே காரணம் என கூறப்படுகிறது.
சொத்துக்கள் முடக்கப்படும்
தனிப்பட்ட 7 பேர்கள் மற்றும் 6 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படலாம் என்றும், இவர்கள் ஈரானுக்கு உதவியதாகவும் பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் வெளியிடப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், பயணத் தடையும் விதிக்கப்படும். மேலும் அந்த நிறுவனங்களின் சொத்துக்களும் முடக்கப்படும். ஏற்கனவே புரட்சிகர படை உட்பட ஈரான் மீது 400 தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கடந்த வார ஈரானின் நடவடிக்கைக்கு எதிராக பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. தற்போதைய தடையானது புரட்சிகர படை மற்றும் ஈரானிய ராணுவ தலைமையகத்திற்கும் பொருந்தும் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஆபத்தான நடவடிக்கை
அத்துடன் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகமது ரேசா, ஈரானின் மத்திய ராணுவ தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் கோலமாலி ரஷீத் ஆகியோர் மீதும் பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய நிர்வாகத்தின் தாக்குதல் என்பது ஒரு பொறுப்பற்ற செயல் மற்றும் ஆபத்தான நடவடிக்கை என தெரிவித்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். மேலும், தாக்குதலுக்கு காரணமான ஈரானிய இராணுவம் மற்றும் படைகளின் தலைவர்கள் மீது தடை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தரப்பில் 16 ராணுவ அதிகாரிகள் மீதும் 2 நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இரு நிறுவனங்களும் இஸ்ரேல் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு உதவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.