ஐரோப்பாவில் கடும் உணவு தட்டுப்பாடு… அதிர்ச்சி தரும் பின்னணி:
ஐரோப்பாவில் கடும் உணவு தட்டுப்பாடு... அதிர்ச்சி தரும் பின்னணி:
ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளில் உலக வல்லரசாக திகழ்வது பிரித்தானியா ஆகும்.
அங்கு காலநிலை நெருக்கடியால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சியால் பல உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இடைவிடாத மழை
பெருவெள்ளம், வறட்சி உட்பட பல்வேறு காரணங்களால் உலகளாவிய உணவு உற்பத்தி என்பது சிக்கலில் உள்ளது. பிரித்தானியாவில் வாங்கப்பட்டு நுகரப்படும் பல பொருட்கள் சரிவடைந்த விநியோகம் மற்றும் விலை அதிகரிப்பு அபாயத்தில் உள்ளன.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இடைவிடாத மழையால் கோதுமைச் செடிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மட்டுமின்றி, தரமான கோதுமைக்கு பிரித்தானியா பெரும்பாலும் நம்பியிருக்கும் ஜேர்மனியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையில் மழைப்பொழிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் காலநிலை மாற்றம் காரணமான கோதுமையின் தரம் 93 சதவிகிதத்தில் இருந்து 65 சதவிகிதம் என சரிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரித்தானியாவிலும் போதுமான விளைச்சல் இல்லை என்பதால் இறக்குமதி என்பது வரலாற்று உச்சம் காண உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலம் மிகவும் ஈரமாக இருப்பதால் இன்னும் தங்கள் காய்கறிகளை விதைக்கத் தொடங்கவில்லை என்று கூறுகிறார்கள் பிரித்தானிய விவசாயிகள். சில விவசாயிகள் நடவு செய்வதற்கான திட்டத்தையே கைவிட்டுள்ளனர்.
வறட்சி காணப்படுவதாக தகவல்
வயல்களை தரிசு நிலத்தில் வைப்பதையோ அல்லது மாற்றுப் பயிர்களுக்கு மாறுவதையோ விரும்புகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் சிக்கலை சமாளிக்கலாம், ஆனால் பிரித்தானியா நம்பியிருக்கும் நாடுகளும் சிக்கலை எதிர்கொள்வதாகவே கூறப்படுகிறது.
பிரித்தானிய சந்தையில் 32 சதவிகிதம் அளவுக்கு மொராக்கோ தக்காளிகளே காணப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே வறட்சி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உருளைக்கிழங்கின் மொத்த விலை ஆண்டுக்கு 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று ஒரு பெரிய சில்லறை விற்பனையாளர் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் விலையை சீராக வைத்திருக்கும் வகையில் உருளைக்கிழங்கு பையின் அளவை சுமார் 2.5 கிலோவிலிருந்து 2 கிலோவாக குறைத்துள்ளனர்.
இதேப்போன்றே பால், ஆலிவ் எண்ணெய், கோகோ உள்ளிட்ட உணவு வகைகளும் கடும் பற்றாக்குறையை எதிர்கொள்ள உள்ளது.