பொம்மைகளுடன் அந்தரங்க உறவு? குழந்தைகளும் இருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட்…
பொம்மைகளுடன் அந்தரங்க உறவு? குழந்தைகளும் இருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட்...
பொம்மைகளுடன் பெண்களுக்கு அதிக ஆசை இருப்பதை காண முடியும்.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மைகள் மீதான காதலால் பொம்மைகளை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த பெலிசிட்டி காட்லெக் என்ற 25 வயது பெண் தன்னை பொருட்கள் மீதான ஈர்ப்பாளர் என்று கூறியுள்ளார். அத்துடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவர் ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் பேய் பொம்மையான கெல்லி ரோஸியுடன் முதல் திருமணத்தை மேற்கொண்ட பெலிசிட்டி தற்போது ராபர்ட் என்ற ஆண் பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், இவரின் துணையுடன் 10 பொம்மை குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரேச்சல் லூனா, பில்லி என தற்போது 10 பொம்மை குழந்கைள் இருப்பதாக கூறி உள்ள பெலிசிட்டி, ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டதால் கெல்லி பொறாமை கொள்ள மாட்டாள் எனவும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.