மகளை கர்ப்பமாக்கிய தந்தை: திகில் சம்பவம், நடந்தது என்ன?
மகளை கர்ப்பமாக்கிய தந்தை: திகில் சம்பவம், நடந்தது என்ன?
மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை தொடர்பாகவே இப்பதிவு அமையப்போகிறது.
வீட்டில் தனியாக இருந்தபோது அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 20 வயது வளர்ப்பு மகளை பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 50 வயது தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் டெஹ்லான் அடுத்த முகந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால், அந்தப் பெண் மற்றொரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு 20 வயதுடைய மகள் உள்ளார். மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20 வயதுடைய பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, தனது தாயின் இரண்டாவது கணவரான 50 வயதுடைய அந்த நபர், தனது மகள் முறையான (வளர்ப்பு மகள் ) இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் இதுபற்றி தாயிடம் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். பின்னர், வீட்டில் அந்தப் பெண் தனியாக இருக்கும் போதெல்லாம், பல முறை அந்தப் பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த நபரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதன் பின்னரே விடயம் அம்பலமானது. அந்நபரும் கைது செய்யப்பட்டார்.