சித்திரை பிறந்தாலும் சிக்கல்: யாருக்கெல்லாம் தெரியுமா?
சித்திரை பிறந்தாலும் சிக்கல்: யாருக்கெல்லாம் தெரியுமா?
சித்திரை புத்தாண்டு பிறந்தால் நல்வழி பிறக்கும் என்பது ஐதீகம். தமிழர்களின் வாழ்க்கையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும்.
சித்திரை பிறப்பின் மூலம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும் மந்தமான பலன்களும் ஏற்படும்.
மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் 13, சித்திரை 1ஆம் திகதி அதாவது சனிக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.
இதன் விளைவாக எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மந்தமான பலன்கள் ஏற்படும் என பார்க்கலாம்.
1.ரிஷபம்
- பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
- எந்த காரியத்திலும் அலட்சியம் இருக்கக் கூடாது.
- கையெழுத்திடும் போது யோசித்து செய்யவும்.
- முக்கியமான ஆவணங்களை கவனமாக வைக்கவும்.
- வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
- பூர்வீக சொத்து வந்து சேரும்.
- தொழிலில் ஏற்றமும் எழுச்சியும் ஏற்படும்.
- பஞ்சவடி அனுமன் வழிபட்டால் நன்மையை பெறலாம்.
2.மிதுனம்
- அலுவலகத்தில் உயர்வுகள் தேடிவரும்.
- அவசரமும் அலட்சியமும் வேண்டாம்.
- அனுபவம் உள்ளவரின் ஆலோசனை கேட்பது நல்லது.
- வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.
- குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.
- வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
- குலதெய்வ வழிபாடு மிக முக்கியம்.
- பேசும் வார்தையில் கவனம் தேவை.
- ஏழுமலையான், அலர்மேல்மங்கை வழிபாடு நல்லதை தரும்.
3.சிம்மம்
- அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் வேண்டாம்.
- வீண் கர்வம் தவிருங்கள்.
- அனுபவம் உள்ளவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
- குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
- வாழ்க்கை துணைக்கு உடல் ரீதியாக பிரச்சினை ஏற்படும்.
- கடன் வழங்குவதை தவிர்க்கவும்.
- தொலைதூரம் சென்றால் கவனமாக இருக்கவும்.
- கற்பக கணபதி வழிபாடு உயர்வை தரும்.
3.துலாம்
- வார்த்தையில் நிதானம் தேவை.
- வேலையில் பதவி உயர்வு வரும்.
- அயல்நாட்டு பயணம் ஏற்படும்.
- வீடுகளில் பிரச்சினைகள் தீரும்.
- குழந்தைகளின் உடல் நிலை சீராக இருக்கும்.
- பண வரவு அதிகரிக்கும்.
- இரவில் விழித்திருப்பதை தவிர்க்கவும்.
- வாகனத்தில் செல்லும் போதும் கவனம் தேவை.
- அடிவயிறு, நரம்பு, கண் போன்ற உறுப்புகளில் பிரச்சினை ஏற்படும்.
- அங்காளம்மனை வழிப்படுவது நல்லதாகும்.
5.மீனம்
- தலைக்கனத்தை தவிரித்துக்கொள்ளவும்.
- அலுவலகத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்.
- ஊதியத்தில் உயர்வு கிடைக்கும்.
- பதவி உயரும்.
- வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்.
- குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
- ஆடம்பர செலவை குறைக்கவும்.
- கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
- கோதண்டராமரை வழிப்படுவது நல்லதாகும்.