இறந்தவரிடமிருந்து ஈமெயிலா? விடைதெரியா மர்மம் :
இறந்தவரிடமிருந்து ஈமெயிலா? விடைதெரியா மர்மம் :
இறந்தவரிடமிருந்து அவர் பேசுவதுபோலவே நண்பர்களுக்கு இமெயில் வந்தது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் இமெயிலை நமக்கு தேவைப்படும் நேரத்திற்கு அனுப்பும் வசதி உள்ளது. ஆனால் இதுவே 2012 ஆம் ஆண்டில் இறந்தவரிடம் இருந்து இமெயில் வருகிறது என்றால் அது ஆச்சரியம் தரும் விதமாகதான் இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
2012 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் வாழ்ந்து வந்தவர் 32 வயதான ஜாக் ஃப்ரோஸ். இதய நோய் காரணமாக இவர் இறந்தார்.
இவர் இறந்த சில மாதங்களில் இவருடைய நண்பர்களுக்கு இவரின் இமெயில் ஐடி-யில் இருந்து இமெயில் வந்துள்ளது.
அதைக் கண்டு இருவரின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த இமெயில்கள் சகஜகமாக நண்பர்களிடம் பேசுவது போன்று இருந்தது பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்த ஜாக்குடன் 17 வருடங்களாக நண்பனாக இருந்த டிம் ஹார்ட் என்பருக்கு முதலில் இமெயில் வந்துள்ளது. அதில் “நான் உன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்ற தலைப்புடன், நான் பேசுவது கேட்கிறதா? நான் உன்னுடைய வீட்டில் தான் இருக்கிறேன். மேல் அறையை சுத்தம் செய்” என்று இருந்தது.
இதனைப் பார்த்த டிம் வியந்துள்ளார். ஜாக் இறப்பதற்கு முன்பு இருவரும் மேல் மாடியில் அமர்ந்துகொண்டு அறையில் இருக்கும் தூசிகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தது அவருக்கு நினைவிற்கு வந்துள்ளது.
அதே போல், ஜாக்கின் உறவினர் ஜிம்மி மெக்ராவிற்கும் ஒரு எச்சரிக்கை இமெயில் வந்துள்ளது. அதில் “நீ எப்படி இருக்கிறாய்? உனக்கு அடிப்படப்போகிறது என எனக்கு தெரியும். நான் உன்னை எச்சரிக்க முயற்சி செய்தேன், பாதுகாப்பாக இரு என்று எழுதி இருந்தது. ஜாக்கின் இறப்பிற்கு பின்பு ஜிம்மிக்கு காலில் அடிப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.
இந்த இமெயில் ஐடியை யாரும் உபயோகப்படுத்த வாய்ப்பில்லை என அவரின் நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் எப்படி இறந்தவரிடம் இருந்து இமெயில் வந்தது என்பது இதுவரை கண்டறியபடாத மர்மமாகவே இருக்கிறது.
அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர், இறந்த ஜான், தொழில்நுட்பம் மூலம் தங்களிடம் பேசினார் என்பதை நம்புகின்றனர். அதேநேரம் இறந்தவருக்கும், இவர்களுக்கும் பொதுவான நண்பர்கள் யாரேனும் விளையாட்டாக கூட செய்திருக்கலாம் என்றும் பலரும் மறுக்கின்றனர். இருப்பினும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் விடைக்கண்டறிய முடியாத புதிராகவே இந்த நிகழ்வு இருக்கிறது.