மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம்; மருத்துவ உலகில் புதிய மைல் கல்!
மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம்; மருத்துவ உலகில் புதிய மைல் கல்!
மனிதருக்கு மரபணு மாற்றம் செய்யப்ப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, மருத்துவ உலகில் புதிய சாதனையைப் புரிந்திருக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் அதற்கு உயிருடனோ அல்லது இறந்து சில மணி நேரங்களுக்குள் பிறரிடம் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளைப் பொருத்துவார்கள்.
மனிதர்களுக்கு மனித உடல் உறுப்புகளையே பொருத்துவார்கள். அறிவியல் ஆய்வில் சில சமயங்களில் வேறு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தி சோதனை ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் மனிதருக்குப் பொருத்தப்பட்டு, அது வெற்றிகரமாக செயல்படவும் செய்திருக்கிறது. இது எங்கே, எப்போது நடந்தது என்று பார்க்கலாம் வாங்க.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மருத்துவ உலகின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக, மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. தலைமுடி, கண் தொடங்கி இதயம், தோல் வரை சேதமடையும்போது மாற்று உறுப்பு பொருத்தும் அளவுக்கு மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. ஆனாலும் பிற விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்படுவது பெரிய அளவில் வெற்றிகரமாக இல்லை. அந்த தடையும் இப்போது நீங்கி சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
பன்றியின் சிறுநீரகம்
மனிதருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, அது சரியாக செயல்படுகிறதா என்றும் கண்காணிக்கப்பட்டு, அதன் செயல்பாடு வெற்றிகரமாக இருப்பதை உறுதி செய்தபின் அந்த நபரை மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் செய்திருக்கிறார்கள்.
இதை மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாகப் பார்ககப்படுகிறது.இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் புதியதோர் சகாப்தத்தை தொடங்கி வைத்திருக்கிறது என்கின்றனர் மருத்துவ அறிஞர்கள்.
ஏற்கனவே தோல்வியுற்ற முயற்சி
இதேபோல் இதற்கு முன்னதாக இரண்டு முறை பன்றியின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவ உலகம் மேற்கொண்டது. ஆனால் அந்த இரண்டு முயற்சிகளுமே தோல்வியில் தான் முடிந்தன.
இதற்கு முன்பாக இதேபோல மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதர்களுக்குப் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. சிகிச்ச முடிந்த ஒருசில வாரங்களில் அவர்களுடைய நோயெதிர்ப்பு மண்டலம் அந்த உறுப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவற்றின் செயல்பாடு தடைபட்டு, பலனளிக்காமல் அந்த நோயாளிகள் மரணம் அடைநதனர்.
வெற்றிகரமாக பொருத்தப்படட பன்றியின் சிறுநீரகம்
இப்படி தோல்விகளையே சந்தித்து வந்த நிலையில், அமரிக்காவில் உள்ள மாஸ்ச்சுசெட்ஸ் ஜெனரல் ஹால்பிட்டல் (Massachusetts General Hospital) மருத்துவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். சிறுநீரகம் செயலிழந்த 62 வயது ரிச்சர்டு ஸ்லேமேன் (Richard Slayman)என்பவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அந்த சிறுநீரகத்தை உடல் ஏற்றிருக்கிறதா, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வுகள் செய்யபபட்ட நிலையில், அந்த பன்றியின் சிறுநீரகத்தை ரிச்சர்ட்டின் நோயெதிர்ப்பு மண்டலம் இந்த சிறுநீரகத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அவருடைய உடலில் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது, சிறுநீரக உற்பத்தி மற்றும் உடலில் உள்ள திரவங்களை சமநிலையில் வைத்திருக்கும் வேலையைச் சிறப்பாக செய்வதாக இந்த மருத்துவக் குழு தெரிவித்திருக்கிறது.
டிச்சார்ஜ் செய்த நோயாளி
வழக்கமாக மனித சிறுநீரகம் போலவே அவருடைய உடலில் பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படுவதால் மருத்துவக் குழு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு ரிச்சர்டை மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்தது.
ரிச்சர்டும் மருத்துவக் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள். உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இது ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். மனித உறுப்புகள் மாற்றுக்கு கிடைக்காமல் வருடக் கணக்கில் காத்திருக்கும் நிலைக்கு இது மிகப்பெரிய ஆறுதல் தரும் ஆய்வாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.