குருபகவான் கொடுக்கும் சிக்னல்… இந்த ராசிகளுக்கு பெரும் சிக்கல்.
குருபகவான் கொடுக்கும் சிக்னல்... இந்த ராசிகளுக்கு பெரும் சிக்கல்.
குருபகவான் எதிர்வரும் மே 1 இலிருந்து மிதுனம், கடகம், சிம்மம், துலாம், மீனம், போன்ற ராசிகளுக்கு முக்கியமான சில மாற்றங்களை ஏற்படுத்தும்.
மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் கீழ்காணும் 5 ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
மிதுனம் ராசிக்கு நடக்கும் பிரச்சனை:
குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வருவதால் வீடு வாங்கும் ராசி உள்ளது. நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் – உறவில் கவனம்: ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில் கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம். சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள்.
கடகம் ராசிக்கு நடக்கும் பிரச்சனை:
குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும். லாபமாக கொட்டும்: உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது.
அதே சமயம் உங்களுக்கு மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். கடன் வேண்டாம் – கெட்ட எண்ணம் வேண்டாம்: அதீத பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்களே!
சிம்மம் ராசிக்கு நடக்கும் பிரச்சனை:
10ல் குரு இருந்தால் பதவி போகும். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம்.
துலாம் ராசிக்கு நடக்கும் பிரச்சனை:
குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும். பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம். நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
மீனம் ராசிக்கு நடக்கும் பிரச்சனை:
உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.