கொரியன் பெண்கள் உடல் எடையை குறைக்க என்ன செய்வார்கள் தெரியுமா.?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
ஆனால் அவர்களது உடல் அமைப்பானது இதற்கு வழிவகுக்க சிரமப்பட வைக்கும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பலரும் பல முயற்சிகளை செய்வார்கள்.
ஆனால் கொரியன் பெண்கள் தங்களது உடம்பை சீராக வைத்துக்கொள்வார்கள்.
உடல் எடை குறைப்பிற்கான கொரிய நுட்பங்கள் யாவும் எளிமையாகவும் சிறந்த பயனைத் தரக்கூடியதாகவும் உள்ளன.
அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பார்லி டீ
கொரியாவின் மிகப் பிரபலமான பார்லி டீ ஆனது பல ஆரோக்கிய நன்மைகளை தரும். முதலில் சூடான நீரில் வறுக்கப்பட்ட பார்லி தானியத்தை பயன்படுத்தி இந்த டீ தயாரிக்கலாம். இதை குடிப்பதன் மூலம் உடல் எடையானது குறையும்.
க்ரீன் டீ
உலகம் முழுவதும் உள்ள மக்களால் க்ரீன் டீயானது அதிகமாக பருகப்படுகிறது. ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ள க்ரீன் டீ பருகினால் உடம்பில் உள்ள கொழுப்புகள் குறைந்து உடல் எடையானது சீக்கிரமாக குறையும்.
யூஜி டீ
கொரியாவின் பாரம்பரியமான டீ ஆக இது இருக்கிறது. கொரியன் சிட்ரான் அல்லது யூஜா பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. உடல் எடை குறைப்பிற்கும் இந்த பானத்திற்கும் தொடர்பு இல்லை ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
ரோஸ் டீ
மற்றொரு அருமையான கொரியன் பானமாக ரோஸ் டீ இருக்கிறது. இதை தினமும் குடிப்பதனால் உடல் எடையை குறைக்கும். குங்குமப்பூ மற்றும் ரோஜா பூவின் இதழ்களை சேர்த்து இந்த டீ செய்யப்படுகிறது. இது குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.