ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் ஏற்படும் ஆபத்துகள்
பொதுவாகவே நாம் ருத்ராச்சம் மற்றும் கருங்காலி போன்ற மாலைகளை அணிவதற்கு காரணம்
ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் ஏற்படும் ஆபத்துகள் – பொதுவாகவே நாம் ருத்ராச்சம் மற்றும் கருங்காலி போன்ற மாலைகளை அணிவதற்கு காரணம் நமது வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்பது தான்.
இந்தவகையில் சிவ பக்தர்கள் ருத்ராச்சத்தை அணிவது வழக்கம். இதனை அணிவதால் உடலில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
நமக்கு எதிராக செய்யப்படும் எந்த செய்வினைகளும் ருத்ராச்சம் அணிந்திருந்தால் நம்மை அணுகாது. மேலும் ருத்ராச்சம் நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
இதனை அணிந்திருந்தால் பல்வேறு நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றது. அதே போன்று கருங்காலி மாலையும் சிறப்பு வாய்ந்தது தான்.
இதனை அணிவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் ஆர்வம் அதிகரிக்கும். கருங்காலி மாலை அணிந்திருப்பதால் நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.
பாகுபாடு இன்றி அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். அதில் எந்த தடையும் இல்லை. ஆண் பெண் இருபாலாரும் ருத்ராச்சம் அணியலாம். அதனால் பல்வேறு உடல் உள நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதே சமயம் கருங்காலி மாலை அணிவதிலும் பல்வேறு நல்ல பலன்கள் கிடைக்கும் என்றாலும் கருங்காலி மாலையடன் ஒருபோதும் ருத்ராச்ச மாலையை சேர்த்து அணிய கூடாது.
கருங்காலி மற்றும் ருத்ராட்சம் சேர்த்து அணிவதால் நமது இலக்குகள் பூர்த்தியாகாமல் போகலாம். பீடை வந்து சேரும். இறை அருள் இல்லாமல் போகும்.மேலும் கெட்ட சக்தியின் ஈர்ப்பு அதிகரிக்கும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.