பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்!

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்!

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்! அமெரிக்காவில் வசித்து வந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவர், வேர்கடலையால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலே நடனக் கலைஞர்

பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக் கலைஞர் Orla Baxendale. 25 வயதான இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார்.

இங்கிலாந்தின் கிழக்கு Lancashire பகுதியைச் சேர்ந்த Baxendale, தனது நடன வாழ்க்கையை அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண்

Orla Baxendale-வுக்கு கடுமையான வேர்க்கடலை ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால் உணவுப்பொருட்களை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார்.

பிஸ்கட்டை சாப்பிட்டதால் உயிரிழப்பு

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மளிகைக் கடையில் பிஸ்கட்ஸ் வாங்கியுள்ளார். அதன் package label-யில் வேர்க்கடலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த பிஸ்கட்டை அவர் சாப்பிட்டுள்ளார்.

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண்

ஆனால், அதில் வேர்க்கடலை கலந்திருந்ததால் Orla-வுக்கு உடனடியாக ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

அதனை கட்டுப்படுத்த அவர் EpiPen எனும் ஊசியை செலுத்திக் கொண்டபோதிலும், Anaphylactic Shock ஏற்பட்டு 11ஆம் திகதி Orla Baxendale பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து Stew Leonard-யின் மாளிகைக் கடை, Orla Baxendale-வின் இறப்புக்கு காரணமான Vanilla Florentine Cookiesஐ திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண்

இந்த நிலையில், Orla Baxendaleவின் அதிர்ச்சி மரணத்தால் அவரது குடும்பத்தினர் கற்பனை செய்ய முடியாத பேரழிவிற்கு ஆளாகியுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Image (c)  orla_baxendale/Instagram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button