கருப்பு நிற பர்ஸை பயன்படுத்துவது அதிர்ஷ்டம் கொடுக்குமா?

கருப்பு நிற பர்ஸை பயன்படுத்துவது அதிர்ஷ்டம் கொடுக்குமா?

கருப்பு நிற பர்ஸை பயன்படுத்துவது அதிர்ஷ்டம் கொடுக்குமா? பொதுவாகவே பணத்தை வைக்க வேண்டும் என்று நினைத்தால் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது பர்ஸ்தான்.

ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் பர்ஸ் உபயோகிப்பது இப்பொழுது அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்றாகவே திகழ்கின்றது. நமது பணம் நமது கைகளில் இருப்பதை விட பர்ஸில் இருப்பதுதான் அதிகம்.

எனவே அதனை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் பர்ஸின் நிறம் நாம் எந்தளவு பணத்தை ஈர்க்கின்றோம் என்பதில் தாக்கம் செலுத்துகின்றது.

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்பயைில் கருப்பு நிற பர்ஸை பயன்படுத்துவது அதிர்ஷ்டம் கொடுக்குமா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கருப்பு நிற பர்ஸை பயன்படுத்துவது அதிர்ஷ்டம் கொடுக்குமா?

வாஸ்த்து சாஸ்திரத்தில் பல்வேறு விடயங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்றிய நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். அந்த வகையில் சரியான நிறத்தில் பணம் வைக்கும் பர்ஸை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதே சமயம் பணப்பையின் தவறான நிறமும் நிதி இழப்பை ஏற்படுத்த காரணமாக அமையும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர் கருப்பு நிற பர்ஸை தான் பயன்படுத்துகிறோம்.

கருப்பு நிற பர்ஸ் அதிர்ஷ்டமா?

ஆனால் வாஸ்து படி கருப்பு நிற பர்ஸை பயன்படுத்துவது அசுபமாகவே கருதப்படுகின்றது. கருப்பு நிற பர்ஸை பயன்படுத்தினால், பணத்தை ஈட்டுவதை விட இழக்கும் வழிகள் அதிகரிக்கும்.

காரணம் கருப்பு நிறம் சனியின் நிறமாகவே பார்க்கப்படுகின்றது. மேலும் ஒருவருக்கு சனியின் சதே சதி அல்லது சனியின் தஹியா இருந்தால், சனிபகவான் இந்த நிறத்தின் பர்ஸை வைத்திருப்பவர்கள் மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்துவார்.

இது எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக ஈர்க்கும். அப்படியும் கருப்பு பர்ஸைப் பயன்படுத்துபவராக இருந்தால் அதில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது நன்மை பயக்கும்.

இயல்பாகவே வெள்ளிக்கு பணம் உற்பட அனைத்து செல்வத்தையும் ஈர்க்கும் ஆற்றல் அதிகம். கருப்பு நிறத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைப்பதற்கு இது துணைப்புரியும்.

சந்திரனின் உலோகமாகக் கருதப்படும் வெள்ளி எப்போதும் நேர்மறை ஆற்றலை தன்னை நோக்கி ஈர்க்கும் இயல்புடையது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button