வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை
வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை
வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை – ஆள்நடமாட்டம் குறைந்த வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒன்றரை பவுண் கொண்ட 130,000 ரூபா பெறுமதியான தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது.
தங்க நகை திருட்டு
அருகாமையில் உள்ள மத ஸ்தலத்தில் இருந்து வீடு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பெண்ணை தரையில் உருட்டி நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த கொள்ளை சம்பவம் அருகில் உள்ள நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகைகளுடன் பயணிக்கும் பெண்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.