யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொக்குவில் மற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

யாழ்
யாழ்

இதன்படி, கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயதான செல்வராசா சிந்துஜன் எனும் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

பரிசோதனையின்போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

24 65aa7b28edcd0

இதேவேளை, முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளமை பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button