கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து 4 பேர் பலி
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து 4 பேர் பலி
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் நான்கு பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் காம்லூஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனங்களை செலுத்திய இரண்டு சாரதிகள் உயிரிழந்துடன் மேலும் இரண்டு பயணிகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
வித்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.