தலைவர் பிரபாகரன் நடிகர் விஜயகாந்திற்கு எழுதிய கடிதம்.!!
தலைவர் பிரபாகரன் நடிகர் விஜயகாந்திற்கு எழுதிய கடிதம்.!!
தலைவர் பிரபாகரன் நடிகர் விஜயகாந்திற்கு எழுதிய கடிதம்.!! மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, 2008ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனே நேரடியாக கடிதம் எழுதியிருக்கிறார் என நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் மறைவு
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது தமிழ் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அர்ஜுன் போன்ற சில நடிகர்கள் அவரது இறப்பிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் நடிகர்கள் அஜித் குமார், வடிவேலு, சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் வராதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர்விட்டு அழுதது பேசுபொருளானது.
கொந்தளித்த நடிகர் மீசை ராஜேந்திரன்
இந்த நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், விஜயகாந்தின் மறைவுக்கு வராமல் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய நடிகர்களை கடுமையாக விளாசியுள்ளார்.