யாழ்ப்பாணத்தில் 3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் !
யாழ்ப்பாணத்தில் 3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் !
யாழ்ப்பாணத்தில் 3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் ! யாழ்ப்பாணம் வேலணையில் 3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாக நோக்க வேண்டியுள்ளதாக வட இலங்கையை பொருத்தமட்டில் பேராசிரியர் கா.இந்திரபாலா பேராசிரியர் பொ.இரகுபதி பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா போன்றோர்களால் மேற்கொண்ட ஆய்வுகளில் இத்தகைய பண்பாடு பற்றி கூறப்பட்டு வந்தது.
இந் நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் முகமாகவே தற்போது இத்தொல்லியல் எச்சங்கள் கிடைக்கப்பட்டுள்ளமை சிறப்பாகும். எனினும் இவை நுண்கற்காலத்தை தொடர்ந்து வந்த பெருங்கற்கால பண்பாட்டிற்குரியதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாகர் வழிவந்த மக்கள் பெருங்கற்கால மக்களே ஆவர் இத் தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை இவ் அகழ்வாய்வில் விலங்குகளின் எச்சங்கள் கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் 3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் !
மேலும் இந்த அகழ்வாய்வினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன அவர்களுடன் இணைந்து இந்திகா ஜெயசேகரஇ ஜனினா நோனிஸ் அத்துடன் தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகத்தின் நதீரா திஸாநாயக்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்களான டக்சினி கனுஸ்டன் சுசாந்தி ஆகியோர் இவ் ஆராய்ச்சியை மேற்கொண்டனர் .