போதகரின் பிழையான வழிகாட்டல் 7 பேர் உயிரை விட்ட சோகம்.!!

போதகரின் பிழையான வழிகாட்டல் 7 பேர் உயிரை விட்ட சோகம்.!!

போதகரின் பிழையான வழிகாட்டல் 7 பேர் உயிரை விட்ட சோகம்.!! கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் போதனைகளுக்கு ஆளான நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குணரத்ன அண்மையில் ஹோமாகமவில் விஷம் அருந்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தத்துவ போதகரான ருவானுடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் இருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

பிழையான வழிகாட்டல்

21 வயதான யுவதி ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரின் சடலம் மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதம் தொடர்பான விரிவுரைகளை ஆற்றி வருபவர் என அறியப்பட்ட ருவன் பிரசன்ன குணரத்ன அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் இதேபோன்று இறந்து கிடந்தார்.

உயிரிழந்த பெண்ணும், ஆணும் ருவான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட போதகரின் பிரசங்கங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை பரிதாபமாக முடித்துக்கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ கூறினார்.

‘அடுத்த ஆன்மாவை நோக்கிய விரைவான மாற்றத்திற்கான ஒரு வழிமுறையே தற்கொலை” என இந்த பிரசங்கங்களில், குணரத்ன உயிரை மாய்ப்பதை ‘நியாயப்படுத்தியதாக’ கூறப்படுகிறது .

உயிரிழந்த போதகர், கொட்டாவ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாதம் ரூ. 150,000 செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button