ஈரானை உலுக்கிய குண்டு வெடிப்பில் 103 போ் பலி… 211 போ் காயம்
ஈரானை உலுக்கிய குண்டு வெடிப்பில் 103 போ் பலி... 211 போ் காயம்
ஈரானை உலுக்கிய குண்டு வெடிப்பில் 103 போ் பலி… 211 போ் காயம் ஈரான் துணை ராணுவப் படை தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நேற்று நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 103 போ் உயிரிழந்ததுடன் 211 போ் காயமடைந்துள்ளனா்.
ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு தளபதியாக இருந்தவா் காசிம் சுலைமானி. அந்த நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய காசிம் சுலைமானி இராக் சென்றிருந்தபோது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுலைமானி உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
காசிம் சுலைமானிக்கு அஞ்சலி
இந்நிலையில், காசிம் சுலைமானியின் 4-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான கொ்மானில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்றையதினம் (3) நடைபெற்றது.
நூற்றுக்கணக்கானோர் பெங்கேற்ற இந்நிகழ்வில் சுமாா் 15 நிமிஷ இடைவெளியில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வெடிகுண்டுகள் தொலைவிலிருந்தபடி வெடிக்கச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 103 போ் உயிரிழந்ததாகவும், 211 போ் காயமடைந்ததாகவும் சா்வதேச செம்பிறைச் சங்கம் தெரிவித்தது. இதில் பெரும்பாலானவா்கள் இரண்டாவது குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாகவும், முதல் குண்டுவெடிப்புக்குப் பிறகு அங்கு மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக அவா்கள் அங்கு குழுமியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், ஈரானின் முக்கிய தளபதிக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் தற்போது நடத்தப்பட்டுள்ள இரட்டை குண்டுவெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.