அம்பாறையில் வெள்ளத்தால் மூழ்கும் வீதிகள் மக்கள் இடம்பெயர்வு
அம்பாறையில் வெள்ளத்தால் மூழ்கும் வீதிகள் மக்கள் இடம்பெயர்வு
அம்பாறையில் வெள்ளத்தால் மூழ்கும் வீதிகள் மக்கள் இடம்பெயர்வு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காரைதீவு மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதை வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக பெரிய பாலத்திற்கும் சின்ன பாலத்திற்கும் இடையில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அதேசமயம் தொடர்ந்து மழைபெய்தால் முற்றாக போக்குவரத்து தடைப்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நீர் நிலைபோன்று காட்சியளிக்கின்றது.
அத்துடன் வீதி ஓரங்களில் மீன்பிடி நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டுவருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் வீடுகள் பலதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் கிராம மக்களில் சிலரும் தமது விடுகளிலிருந்து வெளியாகி பாதுகாப்பான இடங்களை நோக்கியும், உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றுள்ளனர்.
மேலும் வெள்ளநீர் தேங்கியமையால் கல்முனை – அக்கரைப்பற்று காபட் வீதிகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதுடன் வாகன போக்குவரத்திற்கு சாரதிகள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.