யானையுடன் மோதியதில் விபத்திற்குள்ளான பேருந்து!
யானையுடன் மோதியதில் விபத்திற்குள்ளான பேருந்து!
யானையுடன் மோதியதில் விபத்திற்குள்ளான பேருந்து! தனியார் பயணிகள் பேருந்து ஒன்று யானையுடன் மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது.
இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயிலுப்பல்லம விதை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இன்று (24) அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெகிராவையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விதை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இருந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்கு செல்வதற்காக வேலியை உடைத்துக்கொண்டு வீதிக்கு வந்தபோது இந்த பேருந்து மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சாரதி, நடத்துனர் உள்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில், “விமான அனுபவத்தை பூமியில் அனுபவிக்க வாருங்கள்” என்ற வாக்கியமும் எழுதப்பட்டிருந்தது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.