இலங்கையில் கொடுரம் : 6 மாத கருவை கலைத்து புதைத்த தாய்!

இலங்கையில் கொடுரம் : 6 மாத கருவை கலைத்து புதைத்த தாய்!

இலங்கையில் கொடுரம் : 6 மாத கருவை கலைத்து புதைத்த தாய்! 6 மாத கருவொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தேக்கவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தம்புத்தேகம தேக்கவத்தை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கருவை புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரு 6 மாதமாக இருக்கும் போது அதனை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாக சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவர் தனது கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருவதாகவும், கலதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தகாத உறவை பேணி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் அந்த பெண், கர்ப்பமாகி கருவை கலைத்த பின் புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அவரது குழந்தையை காணவில்லை என்றும் அநாமதேய தொலைபேசி அழைப்பை அடுத்து தம்புத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தம்புத்தேகம பொலிஸார் கரு புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது.

சம்பவம் தொடர்பில் 32 வயதான பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது கைதான இருவரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button