பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் பணியிடைநீக்கம்.!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் பணியிடைநீக்கம்.!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் பணியிடைநீக்கம்.! கோவை மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை பகுதியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார்.
ராஜ்குமார் தன்னிடம் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் துறை ரீதியான விசாரணை நடந்தது.
விசாரணையில், ஆசிரியர் ராஜ்குமாரின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. மாணவிகளிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியர் ராஜ்குமாரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.