வெளி இடங்களுக்கு பயணிப்போருக்குக்கான ஓர் முக்கிய எச்சரிக்கை
வெளி இடங்களுக்கு பயணிப்போருக்குக்கான ஓர் முக்கிய எச்சரிக்கை
வெளி இடங்களுக்கு பயணிப்போருக்குக்கான ஓர் முக்கிய எச்சரிக்கை பண்டிகை காலத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை காரணமாக வெளி இடங்களுக்கு பயணிப்போர் அபாயகரமானதும் முன்னறியாத இடங்களிலும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை காரணமாக பல நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பலாங்கொடை கல்தொட்ட பிரதான வீதியில் பல இடங்களில் மண் மேடு, மின் கம்பம், கற்பாறைகள் மற்றும் மரங்கள் வீதியில் சரிந்து வீழ்ந்ததில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வீதியின் ஊாடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அல்லது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.