15 வயது மாணவியை கற்பழித்த மாணவர்கள் : வீடியோ எடுத்து மிரட்டல்.!!

15 வயது மாணவியை கற்பழித்த மாணவர்கள் : வீடியோ எடுத்து மிரட்டல்.!!

15 வயது மாணவியை கற்பழித்த மாணவர்கள் : வீடியோ எடுத்து மிரட்டல்.!! பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை காணொளிகளாக எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்ட இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியாவார்.

பாலியல் துஷ்பிரயோகம்

குறித்த மாணவி தனது காதலனுடன் கண்டி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அதோடு காதலன் அதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் காணொளிகளை மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தி மீண்டும் விடுதிக்கு வரவழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு

இந்தச் சம்பவத்தை தனது முன்னால் காதலனிடம் மாணவி தெரிவித்ததையடுத்து காணொளிகளை தனக்கு அனுப்புமாறு முன்னாள் காதலன் கூறியுள்ளார். மாணவி காணொளிகளை முன்னாள் காதலனுக்கு அனுப்பிய நிலையில் அவர் அதனை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button