முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் : நான்கு வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் : நான்கு வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் : நான்கு வான் கதவுகள் திறப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய வெல்ல அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான முத்து ஐயன்கட்டுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

குறித்த குளத்தின் நீர் அதிகரித்திருக்கின்ற நிலையிலேயே குளத்தின் நான்கு நான் கதவுகள் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

24 அடி கொள்ளளவு கொண்ட முத்து ஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3 அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது.

முல்லைத்தீவு

நீர் அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலத்துக்கும் இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன இன்று காலை முத்து ஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன் ஒட்டுசுட்டான். பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன் ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஸ் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நான்கு கதவுகளை திறந்து வைத்துள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button