கனடாவில் சொந்த பிள்ளைகளை கொன்ற இளம் தாய்
கனடாவில் சொந்த பிள்ளைகளை கொன்ற இளம் தாய்
கனடாவில் சொந்த பிள்ளைகளை கொன்றதாக இளம் தாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான கோஸ்டா கொலியாஸ் என்ற பெண் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நான்கு மற்றும் ஐந்து வயதான இரண்டு ஆண் குழந்தைகளை இந்தப் பெண் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
படுகொலை
பொலிஸாருக்கு கிடைக்க தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் இரண்டு பிள்ளைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சிறுவர்களின் தந்தை லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார்.
விரக்தி காரணமாக பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள இந்த பெண் முயற்சித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.