ஜிம்பாப்வேயில் கடும் வறட்சி; 100 யானைகள் மடிந்தன
ஜிம்பாப்வேயில் கடும் வறட்சி; 100 யானைகள் மடிந்தன
ஜிம்பாப்வேயில் கடும் வறட்சி; 100 யானைகள் மடிந்தன
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் பெரிய தேசியப் பூங்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் குறைந்தது 100 யானைகள் மடிந்துவிட்டதாக அனைத்துலக விலங்கு நலப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதை விட வறட்சி அதிகக் காலம் நீடிக்கும் நிலையில், தண்ணீர் நிரம்பியிருந்த குளங்கள் வற்றி வெறும் சேற்றுக் குளங்களாக மாறியுள்ளன.
சூரிய சக்தியில் இயங்கும் 104 துளைக்கிணறுகள் இருந்தாலும், வறட்சியால் அவை சீக்கிரம் வற்றிவிடுகின்றனவாம். இதனால், யானைகள் தண்ணீரும் உணவும் தேடி நீண்ட தூரம் நடந்து செல்வதாக அவ்வமைப்பு கூறியது.
இதற்கு முன்னர் 2019இல் 200க்கும் அதிகமான யானைகள் மாண்டன. அதே போன்று மீண்டும் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது