அரச பேரூந்து ஓட்டுனரின் ஆபத்தான செயல் – வைரலாகும் காணொளி
அரச பேரூந்து ஓட்டுனரின் ஆபத்தான செயல் - வைரலாகும் காணொளி
அரச பேரூந்து ஓட்டுனரின் ஆபத்தான செயல் – வைரலாகும் காணொளி நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை 12 .30 மணியளவில் வட தமிழீழம் கிளிநொச்சி – வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது.
அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தையே நம்பி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு, கவனயீனமாக செயற்படும் சாரதிகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்நிலையில், அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதியான பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.