கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்
கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் பாதையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளபடி பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருத்தப் பணிகள்
குறித்த திருத்தப் பணிகளை 2024 ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் முன்னெடுக்கவும் அதனை 6 மாத காலத்திற்குள் நிறைவு செய்யவும் எதிர்பார்த்திருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.