கம்பஹா அடைமானக்கடையில் நடந்த பாரிய கொள்ளை சம்பவம்.!
கம்பஹா அடைமானக்கடையில் நடந்த பாரிய கொள்ளை சம்பவம்.!
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் அடமான நிலையம் ஒன்றில் இன்று (10) காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை சுமார் 8.20 மணி. மையத்தை திறந்ததும் உள்ளே நுழைந்த இருவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
175 லட்சம் மதிப்பிலான தங்கத்தையும், 10 முதல் 15 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக அடகுக் கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.