மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டியவர் கைது

மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டியவர் கைது மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுனுவில பண்டிரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் தரம் 04 வகுப்பறையில் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டதன் பின்னர், தனது கையடக்கத் தொலைபேசியில் சில ஆபாச காணொளிகளை பிள்ளைகளுக்குக் காட்டியதாக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தின் போது வகுப்பறையில் ஆசிரியர் இல்லை எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button