மகள்களை மணமுடிக்கும் அப்பாக்கள்.. வினோத பழக்கத்தை கொண்ட பழங்குடியின இனம்!

மகள்களை மணமுடிக்கும் அப்பாக்கள்.. வினோத பழக்கத்தை கொண்ட பழங்குடியின இனம்!

மகள்களை மணமுடிக்கும் அப்பாக்கள்.. வினோத பழக்கத்தை கொண்ட பழங்குடியின இனம்! உலகெங்கிலும் மனித இனத்தை பொறுத்தவரையில் திருமணம் என்பது வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தாலும், தந்தை மகள், சகோதர, சகோதரிகள் இடையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பெரும்பாலும் இல்லை.

ஒரே ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்யும் பட்சத்தில், ஆரோக்கியமற்ற குழந்தைகள் பிறக்கும் என்ற அறிவியல் பூர்வமான உண்மை ஒரு பக்கம். அதே சமயம் பாலுணர்வு ஈர்ப்புகளை கடந்து பாசத்திலும், நேசத்திலும் கட்டமைக்கப்பட்ட உறவுகளுக்கு இடையே திருமணம் செய்யக்கூடாது என்ற பாரம்பரிய கட்டுப்பாடு உலகெங்கிலும் காணப்படுகிறது.

விசித்திரமாக சகோதர, சகோதரிகள் இடையேயும், தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம் ஏற்படுகின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே எப்போதாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் ஒரு பெண்ணின் மரபு வழி தந்தை வேறொருவர் என்றால், அந்த வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் சில தந்தையர்களிடம் இருக்கிறது.

வங்கதேசத்திலும் இப்படி ஒரு வினோத பழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியினம் இருக்கிறது. இந்நாட்டைச் சேர்ந்த மண்டி என்ற பழங்குடியின மக்கள் நாடெங்கிலும் உள்ள பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த இன மக்களிடையே தந்தை மகள் திருமணம் செய்யும் கலாச்சாரம் மேலோங்கி உள்ளது.

மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் நாட்டின் பிற மக்களிடமிருந்து வேறுபட்டவர்களாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த யாரேனும் ஒரு பெண் கணவரை இழந்து கைம்பெண்ணாக மாறினால், அதை இனத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் அந்தப் பெண்ணை மறுமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவ்வாறு மறுமணம் செய்யும்போது, அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருந்தால், அந்த குழந்தையை இவர்கள் தன்னுடைய குழந்தையாக கருதுவதில்லை. அந்தப் பெண் குழந்தை வளர்ந்து பருவம் எய்தியதும் அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் மாண்டி இன ஆண்களிடம் உள்ளது.

மகள்களை மணமுடிக்கும் அப்பாக்கள்

அதுவரையிலும் வளர்ப்பு தந்தையாக பார்க்கப்பட்டு வந்த நபரை, பின்னர் அந்த பெண்கள் கணவராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இப்படி ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே, பெண் குழந்தையுடன் கூடிய கைம்பெண்களை ஆண்கள் திருமணம் செய்வார்களாம்.

மரபு வழி தந்தை மற்றும் மரபு வழி மகள் இடையே திருமணம் நடைபெறுவதில்லை என்பதாலும், மறுமணம் செய்து கொள்ளுகின்ற பெண் மற்றும் அந்த பெண்ணின் பெண் குழந்தைக்கு சேர்த்து வாழ்க்கை உத்தரவாதத்தை ஆண்கள் கொடுப்பதாலும் இது போன்ற வளர்ப்பு தந்தை மற்றும் மகள் இடையேயான திருமணங்களை மாண்டி இனம் ஏற்றுக் கொள்கிறது.

தற்போது இந்த இனத்தைச் சேர்ந்த ஓரோலா என்ற பெண்ணின் திருமணம் இதே போன்ற முறையில் நடைபெற்றுள்ளது. இந்த பெண்ணின் தந்தை காலமான பிறகு, இவரது தாயாரை திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவர் தற்போது, இந்தப் பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button