துப்பாக்கியுடன் வந்த நபரால் விமான நிலையத்தில் பரபரப்பு
துப்பாக்கியுடன் வந்த நபரால் விமான நிலையத்தில் பரபரப்பு
துப்பாக்கியுடன் வந்த நபரால் விமான நிலையத்தில் பரபரப்பு துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த விமான பயணி ஒருவர் இன்று (07) அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய நபர் ஒருவரே அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பயணப் பெட்டியில் மறைத்து குறித்த நபர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததனால் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.