ஜேர்மனியை வாட்டி வதைக்கும் மழையும் குளிரும்: மூவர் பலி
ஜேர்மனியை வாட்டி வதைக்கும் மழையும் குளிரும்: மூவர் பலி
ஜேர்மனியை வாட்டி வதைக்கும் மழையும் குளிரும்: மூவர் பலி உறையவைக்கும் மழையும் குளிரும் ஜேர்மனியை வாட்டி வதைக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியாக, சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்.
மாணவர் பலி
கிழக்கு ஜேர்மனியிலுள்ள Erzgebirge மலைப்பகுதியில், பள்ளிப் பேருந்து விபத்தொன்றில் சிக்கியதில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேலும் 10 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், பேருந்து சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள் .
Munichஇல், காலை 6 மணி முதல் நண்பகல் வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. மோசமான வானிலை காரணமாக நாளின் பிற்பகுதியில் புறப்பட திட்டமிடப்பட்டுள்ள பல விமானங்களும் பாதிக்கப்படக்கூடும் என விமான நிலையம் எச்சரித்துள்ளது.
மேலும் இருவர் பலி
பவேரியாவில் ஒரு காரும் டிராக்டர் டிரெய்லர் ஒன்றும் மோதிக் கொண்டதில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Munich நெடுஞ்சாலை ஒன்றில், 13 வாகனங்கள் விபத்தில் சிக்கியதை அடுத்து நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், Munich பகுதியில் ரயில் போக்குவரத்தும் பல நாட்களுக்கு பாதிக்கப்படலாம் என்று ரயில்வே இயக்குனரான Deutsche Bahn தெரிவித்துள்ளார்.