தென் கொரியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞர்.! படங்கள் இணைப்பு
தென் கொரியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை இளைஞர்
தென் கொரியாவில் பணிபுரியச் சென்ற இலங்கையர் ஒருவர், அங்கு பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் மீது தாக்குதல் நடத்தி, கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள துரதிஷ்டவசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கெரட்டவல, நுகபே பமுனுகம பகுதியைச் சேர்ந்த 29 வயதான பி. கே. ஜெனித் துலாஜ் சதுரங்கா என்ற ஒரு குழந்தையின் தந்தை என்று கூறப்படுகிறது. அவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துலாஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் கொரியாவில் வேலைக்கு செல்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் காலமானார், அவரது கனவுகள் அனைத்தும் நிறைவேறாமல் போயுள்ளது என அவரது மறைவுக்குப் பிறகு, ஆதரவற்ற அவரது மனைவி அத்தகைய கருத்தைத் தெரிவித்தார்.
சதுரங்காவின் அறையில் தங்கியிருந்தவர்கள் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னுடன் தகராறு பண்ணுவதாகவும் என்னிடம் தொலைபேசியில் உரையாடும் போது சொல்லுவார். இறுதியாக என்னுடன் உரையாடிய போதும் அந்த விடயம் பற்றி சொல்லிவிட்டுதான் தூங்கச்சென்றார்.
அன்றுதான் பக்கத்து அறையில் இருந்த நபர் தூக்கத்தில் இருந்த சதுராங்கவை சாரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான் என அவரது மனைவி கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். எனினும் கொலை செய்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!