கொழும்பில் ஆபத்தான நபர் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கொழும்பில் குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 8ஆம் மாதம் 5ஆம் திகதியன்று கடவத்தை அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து புலத்சிங்கல வரைக்கும் பயணித்த வேகன் ஆர் ரக காரை இருவர் கொள்ளையடித்துள்ளனர்.

வாடகை அடிப்படையில் காரை எடுத்துக் கொண்டு புலத்சிங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவரஹேன பிரதேசத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது சாரதி மயக்கமடையச் செய்யப்பட்டுள்ளார்.

சாரதி மயக்கம்

சாரதி மயக்கமடைந்த பின்னர் வாகனத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் ஆபத்தான நபர் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

குறித்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரின் புகைப்படங்கள் மற்றும் வரைந்து எடுக்கப்பட்ட புகைப்படமும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button